பச்சை நாவல் மரத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

59பார்த்தது
மதுராந்தகம் அருகே பச்சை நாவல் மரத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு சாலையில் செல்லும் வாகனயோட்டிகள் அச்சத்தில் பயணம் தீயணைப்பு துறை வீரர்கள் தீ அணைப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் To வேடந்தாங்கல் சாலையில் புதுப்பட்டு என்ற இடத்தில் சாலை ஓரத்தில் அதிகப் படியான நாவல் மரங்கள் உள்ளன இன்று மர்ம நபர்கள் இன்று ஒரு மிகப்பெரிய நாவல் மரத்திற்கு தீ வைத்து உள்ளனர்

அந்த தீயானது மரத்திற்குள் பிடித்து மிகப்பெரிய தீயாக மரத்திற்கு மேல் கொழுந்து விட்டு எறிந்தது இந்த மரத்தின் தீயும் மரத்தின் கிளை எந்த நேரத்திலும் விழும் என்கிற அச்சத்தால்வேடந்தாங்கல் சாலையில் செல்லும் வாகனயோட்டிகள் அச்சத்திலும் பயத்திலும் பயணத்தை மேற்கொள்கின்ற நிலைமை ஏற்பட்டது உடனே மதுராந்தகம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை முழுமையாக அணைத்தனர் இதனால் அச்சாலையில் வாகன போக்குவரத்து சீரானது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி