செங்கல்பட்டு நகராட்சியில் அமைந்துள்ள காசி அலிசன் மேல்நிலை பள்ளியில் இறுதி நாள் கருதரங்கில் இலக்கியத்தில் நீதி என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற முதன்மை செயலாளர் இறையன்பு பங்கேற்று கருத்துரை வழங்கினர்.
செங்கல்பட்டு மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தும் செங்கை புத்தக திருவிழா 8-வது நாளான இன்று கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குநர் சுதிர் பி. ஷக்கிள் தலைமையில் நடைப்பெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தும் செங்கை புத்தக திருவிழாவானது 28. 12. 2023 முதல் 04. 01. 2023 வரை நடைபெற்றது. 80 க்கு மேற்பட்ட அரங்குகளில் 1000 த்திற்க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ. 100 கூப்பன் இலவசமாக வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் 20 ஆயிரம் பேரும், பொதுமக்கள் 10 ஆயிரம் பேரும் என இப்புத்தகத்திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில். இந்த புத்தக திருவிழாவில் இவ்வாண்டு 65 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.