SRM வேளாண் அறிவியல் கல்லூரியின் கலை நிகழ்ச்சி

78பார்த்தது
மதுராந்தகம் அருகே SRM வேளாண் அறிவியல் கல்லூரியின் கலை நிகழ்ச்சியில் விஜய் டிவி புகழ்பெற்ற KPY பாலா கலந்து கொண்டு நிகழ்ச்சியினை நடத்தினர்


செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் அமைந்துள்ள பாபுராயன் பேட்டையில் அமைந்துள்ள SRM வேளாண் அறிவியல் கல்லூரியில் அத்தினா 2024 என்ற தலைப்பில் கல்லூரி அளவிலான கலை நிகழ்ச்சிகள் இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வினை SRM வேளாண் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் மு. ஜவஹர்லால் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

SRM. பல்கலைக்கழகத்தின் மாணவர் நல மைய இயக்குனர் முனைவர் நிஷா அசோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார்.

விழாவின் தொடக்க நாளான இன்று கல்லூரி மாணவ மாணவிகளின் கண் கவர் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை கண்டு களித்து விஜய் டிவி புகழ் பாலா அவர்கள் மாணவர்களை பாராட்டினார்


பின்பு KPY பாலா மிமிக்ரி மற்றும் நகைச்சுவையுடன் நிகழ்ச்சியினை நடத்தினார். நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்

எஸ். ஆர். எம் வேளாண் அறிவியல் கல்லூரியின் சார்பாக KPY பாலாவிற்கு நினைவு பரிசுகள் தந்து கௌரவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி