ஸ்ரீ- பொன்னியம்மன் ஆலயத்தில் ஆடிப் பௌர்ணமி திருவிழா

71பார்த்தது
குப்பையை நல்லூர் கிராமத்தில் உள்ள பழமையான அருள்மிகு ஸ்ரீ - பொன்னியம்மன் ஆலயத்தில் ஆடிப் பௌர்ணமி திருவிழாவானது
ஆண்டுதோறும் வெகு விமரிசையாக ஊர்த் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று காலை பொன்னியம்மனுக்கு காப்புக் கட்டுதலுடன் துவங்கிய நிகழ்வில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

செட்டிகுளம் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து, மகளிர் வார வழிபாட்டு மன்றத்தினர் ஊரணி பொங்கலிட்டு, பால் குடங்களுடன் ஊர்வலமாக சென்று பொன்னியம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர்.

பொன்னியம்மனுக்கு
சிறப்பு அபிஷேக அலங்காரமும் ஆராதனைகளும் நடைபெற்றன.

விரதமிருந்த
செவ்வாடை தொண்டர்கள் வேப்பிலை ஆடை அணிந்து கோவிலினை வலம் வந்து நேற்றிக்கடன்களை செலுத்தினர்.

உலக நன்மைக்காக விசேஷ வேள்வி பூஜைகள் நடைபெற்றன.

பிற்பகல் முதல் மாலை வரை பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவையுடன் கூடிய உணவுகள் வழங்கப்பட்டன.

ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் ஆடித்திருவிழாவில் உத்தரமேரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேற்றிக் கடன்களைச் செலுத்தி,
குப்பையநல்லூர்
பொன்னியம்னை வழிபட்டனர்.

ஆடி மாத விழாவிற்கான ஏற்பாடுகளை
கிராமப் பொதுமக்கள் பொன்னியம்மன் ஆலய மகளிர் வார வழிபாட்டு மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி