படியில் தவறி விழுந்தவர் மரணம் - இழப்பீடு வழங்கக்கோரி மறியல்

79பார்த்தது
படியில் தவறி விழுந்தவர் மரணம் - இழப்பீடு வழங்கக்கோரி மறியல்
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த லிங்காபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 39. மாமல்லபுரம், பகிங்ஹாம் கால்வாய்க்கரை சாலையில் உள்ள தனியார் சிற்பக்கூடத்தில், சிற்பியாக பணிபுரிந்தார். கடந்த 15ம் தேதி இரவு, சிற்பக்கூடத்தில் படியில் ஏறியபோது, தவறி விழுந்து காயமடைந்தார். உடன் பணிபுரிந்தவர்கள் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மறுநாள் இறந்தார். இதுகுறித்து, அவரின் மனைவி தனலட்சுமி மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில், சிற்பக்கூடம் தரப்பில், அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி, பா. ம. க. , வினர், நேற்று (செப் 20) பகல் 11: 45 மணிக்கு, மாமல்லபுரம் போலீஸ் நிலையம் முன், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். இதனால், அப்பகுதியில், 30 நிமிடங்கள் போக்குவரத்து தடைபட்டது.

தொடர்புடைய செய்தி