"மறைமலை நகர் பகுதியில் பழைய குற்றவாளிகள் கைது

63பார்த்தது
"மறைமலை நகர் பகுதியில் பழைய குற்றவாளிகள் கைது
மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துார் பகுதியில், தனியார் பல்கலைக்கழகம் அருகில், மறைமலை நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.


விசாரணையில், இருவரும் திருப்போரூர் பகுதியை சேர்ந்த லோகேஷ், 21, இடர்குன்றம் பகுதியை சேர்ந்த ஜெகதீசன், 21, என்பது தெரிய வந்தது.

மேலும், இவர்கள் மீது, செங்கல்பட்டு, திருப்போரூர், மறைமலை நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில், திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது.

மறைமலை நகரில் இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு தப்பிக்கும் போது, போலீசில் பிடிபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி