தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி டிசம்பர் 22ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது வடமேற்கு திசையில் வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று (டிசம்பர் 20) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், அடுத்த மூன்று மணி (காலை 10 மணி வரை) நேரத்திற்கு பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.