கேரளா: கொச்சி அருகே தாயின் சடலத்தை வீட்டின் பின்புறம் மகன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெண்ணலையைச் சேர்ந்த அல்லி (72) என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை மகன் குழி தோண்டி புதைத்துள்ளார். இந்த சம்பவத்தில், அல்லியின் மகன் பிரதீப்பை போலீசார் கைது செய்தனர். உடல் புதைக்கப்படுவதைக் கண்ட அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த போலீசார் உடலை தோண்டியெடுத்து பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.