தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் டிச., 22ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும்.