பேருந்து கட்டணம் திடீர் உயர்வு.. அரசு கொடுத்த ஷாக்

66பார்த்தது
பேருந்து கட்டணம் திடீர் உயர்வு.. அரசு கொடுத்த ஷாக்
புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. நகர பேருந்துகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.7 ஆகவும், அதிகப்பட்ச கட்டணம் ரூ.13ல் இருந்து ரூ.17 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி வசதியுடன் கூடிய பேருந்துகளில் ரூ.10ல் இருந்து ரூ.13 ஆகவும், அதிகப்பட்ச கட்டணம் ரூ.26ல் இருந்து ரூ.34 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் புதுச்சேரியிலிருந்து கடலூருக்கான கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.25 ஆகவும், விழுப்புரத்திற்கு ரூ.30 ஆகவும் உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி