"பயன்பாடின்றி வீணாகும் நீர்த்தேக்க தொட்டி"

76பார்த்தது
"பயன்பாடின்றி வீணாகும் நீர்த்தேக்க தொட்டி"
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது குருமஞ்சேரி கிராமம். இங்குள்ள புதிய காலனி மக்களின் குடிநீர் தேவைக்கு அப்பகுதி பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து, பூமிக்கடியில் புதைக்கப்பட்ட பைப் மூலம் குருமஞ்சேரியில் குடிநீர் வினியோகம் செய்ய 2015ல், குருமஞ்சேரியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.

இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கான பணி முடிந்து, 2016ம் ஆண்டு வரை குடிநீர் ஏற்றி வினியோகிக்கப்பட்டது.

அதன்பின், முறையான பராமரிப்பு இல்லாததால், இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், தண்ணீர் தேக்குவது மற்றும் குடிநீர் வினியோகம் கைவிடப்பட்டுள்ளது.

தற்போது குருமஞ்சேரி காலனி பகுதியினர், அரும்புலியூருக்கு பைப் மூலம் செல்லும் பாலாற்று குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், குருமஞ்சேரி கிராமத்தில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, குருமஞ்சேரியில் பயன்பாடு இல்லாமல் வீணாகும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், முறையாக தண்ணீர் ஏற்றி, குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துஉள்ளனர். "

தொடர்புடைய செய்தி