ஆழ் கடலில் அலைசறுக்கு படகு மூலம் தேர்தல் விழிப்புணர்வு

84பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய கோவளம் ஊராட்சியில் உள்ள நீலக்கொடி கடற்கரையில் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என கடலில் அலைச்சறுக்கு வீரர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தேர்தல் அதிகாரியும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருமான அருண்ராஜ் கலந்துகொண்டு அலைசறுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவளம் மீனவர் பகுதியை சேர்ந்த அலைச்சறுக்கு போட்டிகளில் பங்கு பெரும் மீனவர்கள் அலைச்சறுக்கு படகு மூலம் என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்கின்ற வாசகம் அடங்கிய கொடியை ஏந்தி அலை சறுக்கு செய்யும் நபர்கள் மற்றும் சிறிய படகு ஓட்டுபவர்கள் என இருதரப்பினரும் சேர்ந்து ஆழ் கடலில் கொடி ஏந்தி வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் அனைவரும் நூறு சதவிகிதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி காட்டினர்
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ், சார் ஆட்சியர் (பயிற்சி) பிரியா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார், கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா சுந்தர் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி