மதுராந்தகம் தொகுதி திமுக சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஜி. செல்வம் வெற்றி பெற்றதை தொடர்ந்து திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் 2 லட்சத்து 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பேரறிஞர் அண்ணா கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இதனைத் தொடர்ந்து மதுராந்தகம் தொகுதி திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் அவர்களுக்கு பூரண கும்ப மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தம்பு, சத்திய சாய், பொன் சிவகுமார், பேரூர் செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, எழிலரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.