ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

62பார்த்தது
பாலாற்று கரையோரம் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்றதை கண்ட பொதுமக்கள் கிணறு தோண்டும் பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாண்டுர் ஊராட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வந்த நிலையில் சரியான குடிநீர் வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர் இந்நிலையில் பாண்டூர் கிராமத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பக்கத்து கிராமமான கிளாப்பாக்கம் கிராமத்திற்கு குடிநீர் வேண்டி பாண்டூர் கிராம பொதுமக்களின் அனுமதி இன்றி திடீரென பாலாற்றின் கரையோரம் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்றது இதனைக் கண்ட பொதுமக்கள் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி ஆழ்துளைக் கிணறு போடக்கூடாது என்று 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்து ஆழ்துளை கிணறு போடுவதற்கு பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் பொதுமக்களே புடுங்கி வீசி எறிந்தனர்.

தொடர்புடைய செய்தி