தமிழகத்தில் வளிமண்டல மேல் அடுக்க சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழை செய்யக்கூடும் எனவும். சென்னையை பொறுத்தவரை நாளைய தினம் அதிக கன மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதியான புறநகர் பேருந்து நிலையம் , புலிப்பாக்கம், பரனூர் , மகேந்திரா சிட்டி , சிங்கப்பெருமாள் கோயில் மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நல்லிரவு முதல் விட்டுவிட்டு லேசான சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது பரவலாக பெய்த சாரல் மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.