சட்டமேதை அண்ணல் அம்பேத்கரை அவமதித்து பேசியதாக, மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இன்று (டிச., 19) திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. தமிழகம் முழுவதும் இன்று திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர். அமித்ஷாவின் பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழும்பியுள்ள நிலையில், அவரை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.