காஞ்சி மேயர் பதவி தப்புமா?

4229பார்த்தது
காஞ்சி மேயர் பதவி தப்புமா?
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக தி. மு. க. , வைச் சேர்ந்த மஹாலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே, அவருக்கான இடத்தை கைப்பற்றுவதில், தி. மு. க. , கவுன்சிலர்கள் சிலர் காய் நகர்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில், அக். , 5ம் தேதிக்கு பின், டிச. , 6ல் மாநகராட்சி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், ஒரு தரப்பு தி. மு. க. , கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். மேயருடன் சேர்த்து 13 கவுன்சிலர்கள் மட்டுமே இருந்தனர். மூன்றில் ஒரு பங்கு கவுன்சிலர்கள் பங்கேற்காததால், தீர்மானங்கள் நிறைவேறவில்லை.

இதனால், மேயர் மஹாலட்சுமி பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அ. தி. மு. க. , கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், அக்கூட்டத்திற்கு 17 கவுன்சிலர்கள் வந்துள்ளதாக கூறி, அதற்கான வருகை பதிவேடு கொண்டு வரப்பட்டுள்ளது. அதில், 13 தி. மு. க. , கவுன்சிலர்களுடன், அ. தி. மு. க. , கவுன்சிலர்கள் இருவர் கையெழுத்திட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது, அ. தி. மு. க. , வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் வரும் 5ம் தேதி, மாநகராட்சி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதிருப்தியில் உள்ள 20 தி. மு. க. , கவுன்சிலர்கள், இக்கூட்டத்திற்கு பெரும்பான்மை இல்லாத நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி