அளவு குறைவான ஆவின் பால்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

78பார்த்தது
அளவு குறைவான ஆவின் பால்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார். சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று காலை விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் எடையளவு மிகவும் குறைவாக இருப்பதாக நுகர்வோர் மத்தியில் புகார் எழுந்துள்ளது. 518 முதல் 520 கிராம் வரை இருக்க வேண்டிய ஒவ்வொரு பால் பாக்கெட்டுகளும் சுமார் 70 கிராம் வரை குறைவான எடையில் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் ஆவின் நிர்வாகத்தில் மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும் என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you