பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.3,000 வழங்க கோரிக்கை!

1044பார்த்தது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.3,000 வழங்க கோரிக்கை!
பெருவெள்ளத்தினால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு ரூ.3,000 ரொக்கம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்பு வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் ரொக்கம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது மிகுந்த வேதனை அளிக்கும் செயலாகும். தற்போதைய நிலையில், எவ்வித நிபந்தனையும் இன்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.