திருவண்ணாமலையில் நெடுங்குணம் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலில் ராமபிரான் மிக அரிதான யோக நித்திரை நிலையில் காட்சி தருகிறார். பிரம்ம மகரிஷியிடம் இருந்து சுவடிகளை வாங்கி அனுமன் படிக்க, அதை சீதாதேவி, லட்சுமணன் மற்றும் அனுமனுக்கு உபதேசித்த கோலத்தில் ராமர் இங்கு எழுந்தருளி இருப்பதாக ஐதீகம். அனுமன் பத்மாசனத்தில் அமர்ந்து கரங்களில் பிரம்ம சூத்திர சுவடிகளை ஏந்தி வாசிக்கும் கோலத்தில் காட்சி தருவதும் வேறு எங்கும் காண முடியாத அற்புதக் காட்சியாகும்.