திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியதால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானா மாநிலம், ஜகித்யாலா மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மணலி கிராமத்தைச் சேர்ந்த ரம்யா (19) என்ற இளம்பெண்ணிற்கு திருமண வரன் பார்த்து வந்துள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த ரம்யா, நவ.26ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தந்தை சின்னய்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.