கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 8 இடங்களில் 24 மணி நேரமும் ஆவின் பாலகங்கள் செயல்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து பொதுமக்களுக்கும் ஆவின் பால் கிடைக்கும் வகையில் ஒருவருக்கு அதிகபட்சம் 4 பால் பாக்கெட் மட்டுமே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆவின் பாலகங்களில் பால் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.