தமிழகத்தின் சென்னை, தூத்துக்குடி மற்றும் மதுரை உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த விமான பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதுகுறித்து தனது ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “கனமழை உள்ளிட்ட வேறுபட்ட பருவநிலை சூழலால், சென்னை, தூத்துக்குடி மற்றும் மதுரை நகரங்களுக்கு இயக்கப்படும் விமான போக்குவரத்து சேவையில் தொடர்ந்து பாதிப்பு ஏற்படும். திருச்சி மற்றும் சேலம் ஆகிய நகரங்களிலும் சேவை பாதிக்கப்படலாம்” என குறிப்பிட்டுள்ளது.