தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம்

55பார்த்தது
தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம்
முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில் இருந்து தாட்டித்தோப்பு, நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.

வாகன போக்குவரத்து நிறைந்த இந்த சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் கால்வாயின் குறுக்கே சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு ஒரு பக்கம் தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது.

இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும்போது, தடுப்புச்சுவர் இல்லாத பாலம் வழியாக கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி