மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, தி. மு. க. , வினர் நேற்று காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காஞ்சிபுரம் தி. மு. க. , மாவட்ட செயலரும், உத்திரமேரூர் தி. மு. க. , - - எம். எல். ஏ. , சுந்தர் தலைமை வகித்தார். பட்ஜெட் அறிவிப்பில், தமிழகத்திற்கு எந்த ஒரு நிதியும் ஒதுக்கப்படவில்லை. முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
இதில், காஞ்சிபுரம் தி. மு. க. , - - எம். பி. , செல்வம் மற்றும் காஞ்சிபுரம் தி. மு. க. , - எம். எல். ஏ. , எழிலரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.