கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறப்பு மாணவர்களுக்கு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் வரவேற்று பாட புத்தகங்களை வாங்கினார்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அரையப்பாக்கம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் மாணவ, மாணவிகள் வரவேற்று அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் பேனா ஜாமென்ட்ரி பாக்ஸ் அடங்கிய பொருட்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் வையாவூர் வி. ஜி. குமரன், கருங்குழி பேரூர் கழக செயலாளர் ஆர். டி. ஜெயராஜ், அரையப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மோகன், கருங்குழி பேரூராட்சி கவுன்சிலர் ஹரி, மதுராந்தகம் வடக்கு ஒன்றிய மகளிர் அணி தலைவர் வசந்தி, மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.