ஆடல் பாடலுடன் கலை கட்டிய கோவளம் பெஸ்ட் விளையாட்டு திருவிழா

77பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் எஸ் டி எஸ் நிறுவனம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது குறிப்பாக கல்விக்கும் விளையாட்டிற்க்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கோவளம் பெஸ்ட் என்ற தலைப்பில் கிரிக்கெட் விளையாட்டு கடந்த மாதம் 11 ஆம் தேதி துவங்கியது திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்கள் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் துவங்கப்பட்டதில் 193 அணிகள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றது இதில் மாமல்லபுரம் எல் எல் எஃப் அணி முதல் பரிசும் கோவளம் கிரிக்கெட் அணி இரண்டாம் பரிசை வென்றது வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கும் நிகழ்ச்சி எஸ்டிஎஸ் நிறுவனர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் பிரகாஷ்ராஜ், கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி உபகரண பொருட்களுடன் ஸ்கூல் பேக் நோட்டு புத்தகம் உள்ளிட்டவைகளுடன் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற மாமல்லபுரம் எல் எல் எப் அணிக்கு முதல் பரிசாக ரூபாய் 2 லட்சம் ரொக்கமும் கோப்பையும் வழங்கியதுடன் இரண்டாம் பரிசாக கோவளம் கிரிக்கெட் அணிக்கு ரூபாய் 1 லட்சம் ரொக்கமுடன் கோப்பையும் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி