திருக்கழுக்குன்றம் கானகோவில்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன், 55, மேட்டு வீரகுப்பத்தைச் சேர்ந்த சேர்மதுரை, 52, ஆகியோர், நேற்று முன்தினம், இருசக்கர வாகனத்தில், 'குட்கா' பொருட்கள் கடத்தியபோது, திருக்கழுக்குன்றம் போலீசாரிடம் பிடிபட்டனர்.
அவர்களிடம் விசாரித்தபோது, சேர்மதுரையின் கடையிலும், 'குட்கா' பொருட்கள் பதுக்கி வைத்துள்ளது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, 94. 400 கிலோ 'குட்கா' பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதன்பின், போலீசார் அளித்த தகவலின்படி அங்கு வந்த உணவு பாதுகாப்புத் துறையினர், சேர்மதுரையின் கடைக்கு, நேற்று 'சீல்' வைத்தனர்.