அரசு ஏசி பேருந்து டயரில் இருந்து வெளியேறிய புகை :

83பார்த்தது
அரசு ஏசி பேருந்து டயரில் இருந்து வெளியேறிய புகை :
சென்னையில் (மாதவரம்) இருந்து திருவண்ணாமலைக்கு TN 21 N 2111 பதிவு எண் கொண்ட அரசு ஏசி பேருந்து சென்று கொண்டிருந்தது.

மறைமலை நகர் அடுத்த போர்ட் அருகே வந்தபோது திடீரென பேருந்தின் பின்பக்க டயரிலிருந்து புகை வெளியேறியது. இதை கண்ட பயணிகள் கூச்சலிட்டனர். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது.

அலறி அடித்து வெளியேறிய பயணிகள்: பயணிகள் அலறி அடித்து பேருந்தில் இருந்து வெளியேறினர். பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில் பேருந்தில் 70 பேர் வரை ஏற்றியதால் ஏசி பேருந்தில் இருந்து புகை வந்ததாக கூறப்படுகிறது.

பயணிகள் வாக்குவாதம்:
பேருந்திலிருந்து வெளியேறிய பயணிகள் ஓட்டுநர் நடத்துனர்யிடம் அதிகப் பயணிகளை ஏற்றப்பட்டதால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் மாதவரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்ல 230 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியதாகவும் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் இல்லை எனில் ஏசி பேருந்து உடனடியாக வரவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை:
சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் தகவல் அறிந்து விரைந்து சென்று காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பயணிகளை சமாதானப்படுத்தியதுடன் அடுத்தடுத்து வந்த சாதாரண பேருந்து மற்றும் ஏசி பேருந்துகளில் அதே டிக்கெட்டில் பயணிக்க ஏற்பாடு செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி