பாலாற்று தடுப்பணை வறட்சி மணலை அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு

53பார்த்தது
பாலாற்று தடுப்பணை வறட்சி மணலை அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
வாலாஜாபாத் அடுத்த, திருமுக்கூடல் அருகே பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன. பாலாற்றின் மூலம் திருமுக்கூடல், பினாயூர் பழையசீவரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தியாவதோடு விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இதனால், இப்பகுதி பாலாற்று படுகையை மையமாகக் கொண்டு தடுப்பணை கட்டி, பாலாற்றின் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கச் செய்ய சுற்றுவட்டார கிராம விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

அக்கோரிக்கையை ஏற்று, 2020ல், பழையசீவரம் - பழவேரி பாலாற்றின் குறுக்கே, நபார்டு திட்டத்தின் கீழ், 42 கோடி ரூபாய் செலவில் நீர்வளத் துறை சார்பில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது.

இந்த தடுப்பணையின் வலது மற்றும் இடது புறங்களில் மதகுடன் கூடிய ஷட்டர் மற்றும் துணை பாசனக் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இந்த தடுப்பணையில் தண்ணீர் நிரம்பினால் பினாயூர், அரும்புலியூர், உள்ளாவூர், பாலுார் உள்ளிட்ட ஏரிகளுக்கு பாசன கால்வாய் வழியாக தண்ணீர் செல்ல வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்தடுப்பணை கட்டியதை தொடர்ந்து, மூன்று ஆண்டுகளாக பருவ மழைக் காலத்தின்போது தடுப்பணை நிரம்பி வழிகிறது. அச்சமயங்களில் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தண்ணீரோடு மணல் அடித்து வந்து தடுப்பணையின் பள்ளமான ஆழப் பகுதிகள் மூடப்பட்டு, தற்போது அணை உயரத்திற்கு மணல் சேர்ந்து மேடு போல உள்ளது.

தொடர்புடைய செய்தி