ஏரி பாசன கால்வாய்களை துார்வாரி சீரமைக்க எதிர்பார்ப்பு

84பார்த்தது
ஏரி பாசன கால்வாய்களை துார்வாரி சீரமைக்க எதிர்பார்ப்பு
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுராந்தகம் ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி, 2, 500 ஏக்கர்.

ஐந்து மதகுகள் வழியாக, 4, 000 ஏக்கர் விவசாய நிலங்களும், மேல்மட்ட கால்வாய் வழியாக, 30 ஏரிகளுக்கு நீர் கொண்டு சென்று, அதிலிருந்து 3, 000 ஏக்கர் நிலங்களும் என, மொத்தம் 7, 000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.


தற்போது, ஏரிக்கு 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆழப்படுத்தி கொள்ளளவை உயர்த்துதல் மற்றும் ஏரியின் கலங்கல்களை கதவணையுடன் கூடிய உபரிநீர் போக்கி கட்டமைக்கும் பணிகள், கடந்த ஓராண்டுக்கு மேலாக நடந்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ஏரியின் உபரிநீர் வெளியேறும் பழைய கலங்கள் பகுதிகள் உடைத்து எடுக்கப்பட்டு, புதிதாக கலங்கல் அமைக்கும் பணி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதனால், ஏரியில் உள்ள நடுமதகு உடைக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர், மதுராந்தகம் கழனிவெளி பகுதிக்கு சென்று, கல்லாறு வாயிலாக கடலில் கலக்கிறது.

எனவே, மதகு வழியாக வெளியேற்றப்படும் ஏரி நீர், விரைந்து வெளியேறும் வகையில், பாசன கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்ந்து போய் உள்ள ஏரி பாசன கால்வாய்களை பராமரிக்க வேண்டும் என, மதுராந்தகம் சுற்றுவட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி