ஸ்ரீ ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சித்திரா பெளர்ணமி பூஜை

78பார்த்தது
கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் சித்திரா பெளர்ணமி மற்றும் சத்யநாரயண பூஜை.


செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் அடுத்த கருங்குழி
ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் சித்திரா பெளர்ணமி பூஜையை முன்னிட்டு யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 10 ஆண்டுகளுக்கு
மேலாக தவத்தில் அமர்ந்திருக்கும் கருங்குழி பிருந்தாவன் சித்தர்
யோகிரகோத்தமா பக்தர்களை சந்திக்கும் 120- வது பெளர்ணமி
தரிசனம் நடைபெற்றது.

12 மணிக்கு சேஷபீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த சித்தருக்கு பக்தர்கள் தங்கள் திருகரங்களால் ஓம் நமசிவாய மந்திர உச்சாடனைவுடன் அபிஷேகம் செய்து சித்தரின் அருள்ஆசி பெற்றனர்.

அதனை தொடர்ந்து, மக்கள் சுபிஷமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை
செய்யப்பட்டு ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில்
யாகம் வளர்த்து சத்தியநாரயண பூஜையும் செய்து மகாதீப ஆராதனையை சித்தர்
பக்தர்களுக்கு காண்பித்தார்.

இந்நிகழ்வில் மன்னார்குடியைச் சேர்ந்த மண்ணை சிங்காரவேல் சரவண செல்வி, வண்டலூர் மாம்பாக்கத்தைச் சார்ந்த ராஜசேகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில்
கருங்குழி மட்டுமின்றி
செங்கல்பட்டு, சென்னை,
புதுச்சேரி, பெங்களுரு, கடலூர்,
மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட
பல்வேறு பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு
சித்தரிடம் அருள் ஆசிபெற்றனர்.

தொடர்புடைய செய்தி