வையாவூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு

61பார்த்தது
மதுராந்தகம் அருகே உள்ள வையாவூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் கருப்பு ஆடை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்தனர்




செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராம மக்களுக்கு எந்த வித அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை என ஊராட்சி மன்ற தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை

இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டம் வார்டு உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் கூட்டம் நடைபெற இருந்தது இதை அறிந்த ஒன்பது வார்டு உறுப்பினர்கள் கருப்பு ஆடை அணிந்து கூட்டத்திற்கு வந்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்
அதிகாரி மறு தேதி குறிப்பிடாமல் கிராம சபை கூட்டத்தை தள்ளி வைத்தார்.

தொடர்புடைய செய்தி