அதிமுக வேட்பாளர் மதுராந்தகம் பகுதியில் வாக்கு சேகரிப்பு

53பார்த்தது
காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்கள் மதுராந்தகம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈசூர், பூதூர், புதுப்பட்டு, வேடந்தாங்கல், கீழ்வலம், மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சென்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது கட்சி நிர்வாகிகள் வேட்பாளருக்கு மாலை அணிவித்து சால்வை அணிவித்து ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர் வாக்கு சேகரிப்பில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வையாவூர் வி. ஜி. குமரன் , மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன் இவர்கள் கலந்து கொண்டு திறந்த வாகனத்தில் சென்று அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பொதுமக்கள் இடையே எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி