அஜித் நடித்த வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா பாடலைக் கேட்டு Vibe செய்யாதவர்களே இருக்க முடியாது. இந்த பாடலை ரோகேஷ் எழுத அனிருத் பாடி இருந்தார். அதேபோல், ஆதிக் ரவிச்சதுரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேக் அக்லி படத்தில் OG SAMBAVAM பாடலையும் ரோகேஷ் எழுதி அனிருத் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 18-ல் வெளியாகும் OG SAMBAVAM பாடலை கொண்டாட அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.