2025 ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என CSK அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், போட்டி முடிந்து ரசிகர்கள் பாதுகாப்பாக திரும்பவதற்காக, கூடுதலாக 90 நிமிடங்களுக்கு மெட்ரோ சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச்.23-ம் தேதி CSK தனது முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது.