ட்ரோன் மூலம் தொழுநோயாளிகளுக்கு மருந்துகள் அனுப்பும் சோதனை

77பார்த்தது
இந்தியா முழுவதும் ட்ரோன் மூலம் மலைபகுதிகள், வனாந்திர காடுகள் பகுதிகளில் முக்கிய தேவைகளாக மாறிவருகிறது.

இதன் இன்னொரு முக்கிய அங்கமாக மத்திய தொழுநோய் பயிற்சி ஆராய்ச்சி நிலையம் சார்பில் கிராம மருத்துவமனைக்கு ட்ரோன் விமானம் மூலம் அவசர சிகிச்சைக்கு மருந்து விநியோகம் செய்ய சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறை வேற்றப்பட்டது.

செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் மத்திய தொழுநோய் பயிற்சி ஆராய்ச்சி நிலையம் சார்பில் மாவட்டத்தில் உள்ள இதர தொழுநோய் மருத்துவமனைகளுக்கு அவசர சிகிச்சைக்கான மருந்துகள் விரைவாக அனுப்பவும் ரத்தப் பரிசோதனை மாதிரிகளை விரைவாக எடுத்து பரிசோதை செய்ய சிறிய ரக ட்ரோன் விமானம் மூலம் எடுத்து செல்லும் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.

பரனூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள தொழுநோயாளிகளுக்கு மருந்துகள் அனுப்பவும், இரத்த மாரிதிகளை எடுத்து வரவும் திட்டமிட பட்டுள்ளது.

குறிப்பாக மூன்று பிரிவுகளாக எல்லைகளை வரையறுத்துள்ளது. மேலும் விமான நிலையம், விமான தளவாடங்கள் அமைக்கப்படுள்ள பகுதிகளை சுமார் 5முதல் 10 கிலோமீட்டர் தொலைவை சிவப்பு நிற எல்லைகளாகவும், இராணுவ பயிற்சி மேற்கொள்ளும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள எல்லைபிரிவுகளை 10 முதல் 15 கிலோமீட்டர் தொலைவை ஆரஞ்சு நிற எல்லை பிரிவுகளாகவும், 15முதல் 20 கிரோமீட்டர் தொலைவை பச்சை நிற பிரவுகளாகவும் கணக்கிட்டு வரையறுக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி