பசுந்தாள் உர நிலங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

70பார்த்தது
பசுந்தாள் உர நிலங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரம் என்கிற தக்கைப் பூண்டு விதைகள் வழங்கப்படுகின்றன.

ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் வீதம், 20 கிலோ பசுந்தாள் உரம் விதைகள் வழங்கப்படுகின்றன. உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு பசுந்தாள் உரம் விதைகள் 29, 000 கிலோ வினியோக இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, தற்போது 19, 000 கிலோ விதைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அதில், 13, 000 கிலோ விதை விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதை விவசாயிகள், தங்களது நிலங்களில் பயன்படுத்தும் முறை குறித்து, உத்திரமேரூர் ஒன்றியம், கம்மாளம்பூண்டி, வளத்தோடு, மருதம் ஆகிய கிராம விவசாய நிலங்களில், வேளாண் சார்ந்த மாநில அரசு தணிக்கை துறை அதிகாரி திலகவதி நேற்று ஆய்வு செய்தார்.

அரசின் வேளாண் சலுகைகள் மற்றும் மானிய திட்டங்கள் முறையாக கிடைக்கப் பெறுகிறதா என விவசாயிகளிடத்தில் கேட்டறிந்தார்.

மேலும், பசுந்தாள் உரம் முழுமையாக பயன்படுத்தி விவசாயம் செய்யப்படுகிறதா என, பார்வையிட்ட அவர், அதனுடைய பயன்பாடுகள் குறித்து விவசாயிகளிடத்தில் விளக்கினார்.

உத்திரமேரூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் முத்துலட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி