பள்ளி பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

66பார்த்தது
பள்ளி பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பார்த்தசாரதி தெருவில், பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாய நிலை உள்ளது.

மதுராந்தகம் ஏரிக்கரையில் இருந்து, மாம்பாக்கம் ரயில்வே பாலம் வரை உள்ள இந்த கழிவுநீர் கால்வாய் பராமரிப்பின்றி உள்ளது.

இக்கால்வாய் அமைந்துள்ள பகுதியில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் உள்ளது. இப்பகுதியில் மட்டும், சிமென்ட் கலவையால், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாமல் உள்ளது.

இதனால், மண் சரிவு ஏற்பட்டு, கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால், பன்றிகள் உலா வருவதாலும், பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை கிளறி விடுவதாலும், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதேபோல், பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ள பகுதியில், கழிவுநீர் கால்வாயில் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது.

எனவே, கால்வாயில் அடைத்துள்ள பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை அகற்றி, கழிவுநீர் தேங்கி நிற்காதவாறு, நிரந்தர தீர்வாக சிமென்ட் கான்கிரீட் கால்வாய் அமைக்க, நகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி