குழந்தைகள் அதிக இனிப்பு உணவுகளை சாப்பிடுவதால் மட்டுமே நீரிழிவு நோய் வரும் என்பதற்கு ஆதாரம் கிடையாது. அவர்கள் அதிகப்படியான ஜங்க் உணவுகள், பொறித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நீரிழிவை உண்டாக்கும். பரம்பரையில் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தால் அது பிறக்கும் குழந்தைக்கு வர வாய்ப்புகள் இருக்கிறது. அதே நேரம் அதிக இனிப்புகளை தவிர்ப்பது குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும்.