மும்பை: 12 வயது குழந்தையின் 28 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், “பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கருத்தரித்தவர்களை, குழந்தை பெற்றெடுக்கும்படி வற்புறுத்தக்கூடாது. திருமணமான அல்லது திருமணமாகாத எந்தவொரு பெண்ணாக இருந்தாலும் கருவுறுவது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களால் கருவுற்ற பெண்கள், பாதிப்புகளையும் அவர்களே சந்திக்க வேண்டும் என்ற நிலை கவலைக்குரியது” என கூறியது.