இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலியாக கத்தார் அரசு தனது வான்வெளியை மூடியுள்ளது. இதுகுறித்து கத்தார் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கத்தாரின் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக, நாட்டின் வான்வெளி விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். வீண் பதற்றம் வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.