ஈரானைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளன. அதில், “இஸ்ரேல் தொடுக்கும் தாக்குதல்கள் அனைத்தும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறும் வகையில் உள்ளது” என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், “துரிதமாக செயல்பட்டு சிறார் உரிமைகளையும், உயிரையும், உடல் நலத்தையும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.