அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, அமைச்சர் டிஆர்பி ராஜா விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, “முருகன் பெயரில் பாஜக நடத்திய அரசியல் கூட்டத்தில் தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் கொச்சைப்படுத்தும் காணொளியை பழனிசாமி பார்த்து, அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு கோபம் வரவில்லையா?. இன்னமும் அவரது கட்சி அண்ணாவின் பெயரில்தான் இயங்குகிறதா இல்லையா?. பெரியாரையும் அண்ணாவையும் கொச்சைப்படுத்துபவர்களை வேடிக்கை பார்க்கும் இவர்களை, அவர்களின் கட்சித் தொண்டர்களே மன்னிக்க மாட்டார்கள்” என்றார்.