ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் - 950 பேர் பலி

69பார்த்தது
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் - 950 பேர் பலி
இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் ஈரானில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாகவும், 3,056 பேர் படுகாயமடைந்ததாகவும் ஈரான் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் இதுவரை சுமார் 950 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,450 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களில் 380 பொதுமக்கள் மற்றும் 253 பாதுகாப்பு படை வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி