ஈரானின் அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. மேற்கு ஈரானில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. Fordow அணுசக்தி மையம் மீது அமெரிக்கா நேற்று முன்தினம் (ஜூன் 21) தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், இஸ்ரேலும் தற்போது வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை அழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.