இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் ரிஷப் பண்ட் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். ரிஷப் பண்ட் லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் தலா 134 மற்றும் 118 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் 2 இன்னிங்சில் சதம் விளாசிய ஒரே ஆசிய பேட்டர் என்ற வரலாற்றுச் சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். மேலும், 2 இன்னிங்சிலும் சதம் விளாசிய 2ஆவது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பண்ட் பெற்றுள்ளார்.