அச்சிறுபாக்கம் அடுத்த மின்னல் சித்தாமூர் ஊராட்சியில், 300 குடும்பங்கள் வசிக்கின்றன.
இங்குள்ள பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் வேலைக்கு செல்வோர் பயன்பெறும் வகையில், ஒரத்தி- - தொழுப்பேடு செல்லும் சாலையில் நிழற்குடை அமைக்கப்பட்டது.
அந்த நிழற்குடை, உரிய பராமரிப்பின்றி, கட்டடத்தை சுற்றி விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தங்குமிடமாக உள்ளது.
நிழற்குடையை சீரமைக்கக்கோரி, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, சேதமடைந்துள்ள நிழற்குடையை சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். "