தேர்தலுக்காக எந்த திட்டமும் இல்லை- எல் முருகன் பதில்

65பார்த்தது
*தேர்தலுக்காக எந்தத் திட்டமும் செயல்படுத்தவில்லை நாட்டின் வளர்ச்சிக்காக மட்டும்தான் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்*



பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் ஒரு லட்சம் கோடி ரூபாயில் 114 திட்டத்திற்கு ஹரியானா மாநிலத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.


3200 கோடி ரூபாய் அளவில் தமிழ்நாட்டில் புதிய மேம்பாலங்கள் சாலைகள் அமைப்பதற்கான எட்டு திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவங்கி வைத்தார்.

இதில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள எட்டு தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலம் அமைக்கும் திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டும் நிகழ்வினை காணொளி காட்சி மூலமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கலந்து கொண்டார்.


தர்மபுரி தொப்பூர் சாலையில் செங்குத்தாக மலைப்பகுதியில் சீரமைப்பதற்கு 905 கோடி ஒதுக்கிடப்பட்டு பணிகள் தற்போது துவங்கி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஆந்திரா மாநிலம் எல்லை பகுதி வரை 44 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ. 1376 கோடி ரூபாயில் இருவழி சாலையாக தற்போது உள்ளது அதனை நான்கு வழி சாலையாக மேம்படுத்த திட்டம்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you