செங்கல்பட்டு நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு, துாய்மைப் பணிக்கான உபகரணங்கள் வழங்க, 9. 50 லட்சம் ரூபாய் நிதியை, நகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது.
செங்கல்பட்டு நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு, தலைக்கவசம், கையுறை, முகக்கவசம், காலுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அவசியமாகின்றன.
அதோடு, கத்தி, கடப்பாறை, மண்வெட்டி, கரண்டி, கூடை, தென்னை துடைப்பம், குப்பை இழுக்கும் ஊக்கு உள்ளிட்டவை வாங்க, 9. 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்காக, நகரசபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அனுமதி அளிக்கப்பட்டது.